இயேசுகிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு
என்னில் வாழ்கின்றார்
1.
இயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன்
அவருக்குள் நான் வேர் கொண்டேன்
அவர் மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை – இயேசுகிறிஸ்து
2.
என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்திப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீகன் அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே – இயேசுகிறிஸ்து
3.
எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே – இயேசுகிறிஸ்து
4.
கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவ மன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன் – இயேசுகிறிஸ்து